சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]
