Categories
மாநில செய்திகள்

இந்திக்கு தாய்ப்பால்!… ஆனா மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் இந்திக்கு எதிரான தனி தீர்மானத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த மத்திய அரசு துடிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கும், மற்ற மொழி மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். முழுக்கமுழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது […]

Categories
மாநில செய்திகள்

41 வருஷம்!… மின்சாரம் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு விடிவுக்காலம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

வனத்துறையின் எதிர்ப்பு காரணமாக 41 வருடங்களாக மின்சார வசதி இன்றி சிரமப்படும் திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிபுரம் கிராமமக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராமமக்கள் சார்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் இருப்பதாவது, தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக் கோரி சென்ற 1979 ஆம் வருடம் மின்சார வாரியத்திடம் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இந்த மரியாதை தானா?…. 51-வது ஆண்டு கட்சி துவக்க விழாவில் இபிஎஸ்க்கு ஏற்பட்ட அவமானம்…. தொண்டர்கள் வேதனை….!!!!

அதிமுகவின்    துவக்க விழாவை  கொண்டாட முடியாமல் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் 1972- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் கொண்டாட அனுமதி கேட்டனர். ஆனால் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுமதி கொடுக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் மோசடி!…. மக்களே யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மை காலமாக ஆன்லைன் வாயிலாக பல்வேறு வகை மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடியில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். மொபைல் எண்ணிற்கு தொடர்புகொண்டு ஓடிபி கேட்பது, ஆன்லைன் லோன்ஆப் மோசடி வரிசையில் பாஸ் ஸ்கேம் என புது ஏமாற்று வேலை நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் கும்பல் உங்களது அலுவலகத்தில் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள், மேனேஜர்கள் போல போலியாக சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவார்கள். உங்களது இன்பாக்ஸில் வந்து, என் கார்ட் ப்ளாக்காகிவிட்டது, அக்கவுண்ட் ப்ளாக்காகிவிட்டது என […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ மாணவர்களே!!… நாளை தொடங்குகிறது கலந்தாய்வு…. அமைச்சர் தகவல்….!!!!

மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம்  மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம்  தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை தான் தாக்கல் செய்யப்படும்…. ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு….!!!!

தமிழகத்தில்  கூட்டத்தொடர் நாளை முதல் 2 நாள் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்பிக்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஓ பண்ணி செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த இங்கிலாந்து […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழில்…. கொத்தாக சிக்கிய பாஜக பெண் நிர்வாகி…. பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரைச் சேர்ந்த பா.ஜ.க மாநில நிர்வாகி வேளாங்கண்ணி ஆகிய இரண்டு பேரும் இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வன்(25), புதுச்சேரி மாநில மாநில பாஜக நிர்வாகியான […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. Ambulance ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில்  காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி  ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள  19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே …. இந்த ரயில்கள் எல்லாம் நாளை இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மறு மார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதே  ரயில்  நாளை  நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண எண்- ஆதார் கார்டு இணைப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறுவதற்கு மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்ற அக்டோபர் 6ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆதார்கார்டு வைத்திருக்காதவர்கள் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு இருக்கு…. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி….!!!!

பேரவை அலுவல்களில் கலந்துகொண்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, “ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். அ.தி.மு.க-வில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது ஆகும். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்திருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்று கொள்கிறோம். மக்களின் முழுஆதரவும் எங்களுக்கு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையானது கூடியது. கூட்டம் துவங்கியதும் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு டைம் இருந்தா இங்கே வந்துட்டு போங்க எடப்பாடி!…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!!!

சேலம் இரும்பாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து குடோனில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் பேட்டி அளித்ததாவது “மருத்துவ சேவையில் எவ்வித குழப்பமும் இல்லை. தமிழ்நாட்டில் 32 இடங்களில் மருந்து கிடங்குகள் இருக்கிறது. இதில் அத்தியாவசியமான மருந்துகள் 322 வகை, ஸ்பெஷாலிட்டி மருந்துகள் 302 வகைகள் இருக்கிறது. இப்போது 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இருக்கிறது. எனினும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் வாங்கிக்கொள்ள நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மருந்துதட்டுப்பாடு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சிறுத்தை இறந்த விவகாரம்!…. ஓபிஎஸ் மகன் கைது செய்யப்படுவாரா?… பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக மாவட்ட வனத்துறை அலுவலர் தகவல் தெரிவித்தார். ஏனெனில் தேனியில் உள்ள ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய திமுக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வன அலுவலர் இத்தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வனஅலுவலர் சமர்தா கூறியதாவது “சிறுத்தை இறந்த இடமானது எம்.பி ரவீந்திரநாத் உள்பட 3 நபர்கள் பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

சீன போன்களை overtake பண்ணிய பிரபல ஸ்மார்ட் போன்கள்…. சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனம்….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் செல்போன் விற்பனையில் சாம்சங்க்  அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஈ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சியான சலுகைகளை வழங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பண்டிகை கால விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது. அதிலும் ஆஃபர் அதிகம் உள்ள நிறுவனங்களின் மொபைல்கள் விற்பனை அமோகமாக இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் விற்பனை ஜெட் வேகத்தில் இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் மீண்டும் தலை தூக்கும் வைரஸ்?…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!!

 மீண்டும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதை போல் இந்த ஆண்டு மீண்டும் பாதிப்பு  அதிகரிக்க  தொடங்கியுள்ளது. நமது தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் 168 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. போலி பான் கார்டை கண்டறிவது ரொம்ப ஈசி…. வாங்க எப்படின்னு பாக்கலாம்….!!!!!

போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல வகைகளில்  பான் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.  இதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் தினம் தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்த வருகின்றனர். ஆன்லைன் முறையில் மோசடி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. அரசு பள்ளி மாணவர்களுக்கு “6 திட்டங்கள்”…. அரசு வெளியிட்ட செம குஷியான அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் sc,St, OBC ஆகிய மாணவர்களுக்கு 6  உதவித்தொகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் உள்ள  அரசு  பள்ளிகளிலும் படிக்கும் SC ,ST,OBC ஆகிய மாணவர்களுக்கு 6 வகையான  உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. அதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜனா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC,EBC,DNT ஆகிய மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஊழியர்களே!!…. அரசு அறிவித்த தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

ஆவின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மார்க், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற  24- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது. அதில் இந்த ஆண்டில் பால் மற்றும் பால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்: யாருடையது தெரியுமா?…. அமைச்சர் துரைமுருகன் கூறும் விளக்கம்….!!!!

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புது கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு ஆகிய ஆறுகளில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இருக்கிறோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்கான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை… அப்போ அது மட்டும் எப்படி வந்திருக்கும்?… சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்து இருந்தார். இதையடுத்து சீமான் பேசியதாவது, “குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி ஆகும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூகநீதி பற்றி பேசக் கூடாது. இதற்கிடையில் தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும். ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துமதமும் இல்லை. வரலாற்றில் ராஜ […]

Categories
மாநில செய்திகள்

எங்க தலைவர் சொந்த காசில் போனார்…. ஆனால் நீங்க?…. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சினேகன்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் அண்ணாமலை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை விமர்சனம் செய்தார். இதையடுத்து இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த கட்சியின் நிர்வாகி கவிஞர் சினேகன் பேசியதாவது “அண்ணாமலை சார் எங்கதலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக கூறியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்சிற்கு சொந்தகாசில் போனார். ஆனால் நீங்கள் எந்த பணத்தில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியாது. அவர் அமெரிக்காலிருந்து அரசியல் பேசுறார்னா?… இப்போ […]

Categories
மாநில செய்திகள்

நோய்களை இவர்கள்தான் உருவாக்குகிறார்களா?…. சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்…..!!!!

புதிது புதிதாக பரவும் நோய்களுக்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து கொள்முதல் அதிகாரியாக முத்துமாலை ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முத்துமாலை ராணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

Please பா “எல்லாரும் அமைதியா இருங்க”…. அறிவுரை வழங்கிய மு.க. ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?….!!!!!

நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் அனைவரும் அமைதியான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதனை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கு தாக்கல் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென ஏற்பட்ட ‌” route தலை பிரச்சனை”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

ரயில்  நிலையத்தில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் இருந்து அரங்கோணம் செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே ரூட் தலை பிரச்சினை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு இந்தி தெரியாது போடா…. சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்….!!!!

இந்தி திணிப்பை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது. எங்கள் தமிழ்நாட்டில் இந்தி எந்த வடிவில் வந்தாலும் சரி நாங்கள் ஒரே ஒரு பதிலை தான் சொல்லுவோம். அது  இந்தி தெரியாது போடா என்பதுதான். நீங்கள் இந்த முயற்சியை கைவிடும் […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

12 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை  அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால்  கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

என் நண்பன் சாவிற்கு இவன் தான் காரணம்…. வாலிபரை நடுரோட்டில் விரட்டிய கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!!

வாலிபரை கொலை செய்ய முயன்ற  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசீகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அதை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளார். மேலும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா…. தங்க கவசம் யாருக்கு?…. ஓபிஎஸ்சா, இபிஎஸ்சா “எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்”….!!!!

வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“அவருடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்ல ராஜா”…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்…..!!!!!

சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வருகிற 17ம் தேதி அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. காதலியை “ரயிலின் முன்பு தள்ளிவிட்ட sub inspector மகன்…. அதிரடி விசாரணையில் தனிப்படைகள்….!!!!

காதலியை  வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா சதிஷ்  ஆகிய 2 பேரும்  ஒரு  ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அதேபோல் நேற்றும் இரண்டு பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து சதீஷ் ஓடும் ரயிலின் முன்பு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தீபாவளியில் “இதை மட்டும் செஞ்சுராதீங்க”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை….!!!!

தீபாவளி கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சில  அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் 1.பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். 2. காலை 6:00 மணி முதல் காலை 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 3. மேலும் சுற்றுச்சூழல் […]

Categories
மாநில செய்திகள்

நயன் -விக்கி வாடகை விவகாரம்…. தமிழக சுகாதாரத்துறை புதிய அதிரடி….!!!!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம்  தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

இவங்க எங்களை darket பண்ணுறாங்க…. முடிவுக்கு வந்த “ஓசி பஸ் சர்ச்சை”….. அமைச்சர் பொன்முடி பேட்டி….!!!!

அமைச்சர் ஒருவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கூட்டதில்  கலந்துகொண்ட  பொன்முடி சில கருத்துகளை பேசினார். அதில் பெண்கள்  பேருந்தில் எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் அங்கிருந்து எங்கே போக வேண்டும் என்றாலும் எல்லாம் இலவச பேருந்தில்  தான் போறீங்க என்று பேசினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேப்பேரி பகுதியில்  நடைபெற்ற கூட்டத்தில் பொன்முடி கலந்து […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!!…. தமிழகத்தில் இவர்களுக்கு “மானியத்தோடு வீடு”…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் இன்னும் நான்கு மாதத்தில் முடிவடைகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்  கட்டப்படும் என கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி வீடுகள் ‘எ’ முதல் ‘ஈ’ வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் […]

Categories
மாநில செய்திகள்

வேகவே இல்லை!… இதெல்லாம் மனுஷன் தின்பானா?… KFC மீது வாடிக்கையாளர் புகார்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவுடெலிவரி வாயிலாக KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்து இருக்கிறார். இதையடுத்து கொஞ்ச நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்ததும் அவர் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அப்போது சிக்கன் வேகாமல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில், எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். அதன்பின் தன் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடைபெற்ற சம்பவம் குறித்து SWIGGY […]

Categories
மாநில செய்திகள்

“இவர்களால் தான் தி.மு.க ஆட்சிக்கு சாவுமணி அடிக்க முடியும்”… முன்னாள் அமைச்சர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க சார்பாக அதிமுக-வின் பொன்விழா ஆண்டு மற்றும் 51ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில் வி.சோமசுந்தரம் பேசியதாவது “தி.மு.க ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆன நிலையில், காஞ்சிபுரத்தில் எந்த ஒரு புது திட்டமும் கொண்டுவரவில்லை. எந்த ஒரு புது திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் பூஜ்ஜியமாக இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க […]

Categories
மாநில செய்திகள்

மாணவன் தற்கொலை வழக்கு: வெளியான பரபரப்பு உண்மைகள்…. சிக்கிய ஆசிரியை…. போலீஸ் அதிரடி…..!!!!

சென்னையில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு டியூஷன் எடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது கைதாகியுள்ள பள்ளி ஆசிரியை ஷர்மிளா(23), அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று மாணவனிடம் பேசுவதை அவர் நிறுத்தினார். அதன்பின் ஆசிரியருக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அனைவரிடமும் உண்மை!…. ஒரு படி மேலே சென்ற முதல்வர் ஸ்டாலின்…. புகழ்ந்து தள்ளிய ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம்….!!!!

பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. அவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே போய் விட்டார் என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது “பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரிடமும் உண்மையைப் பேசி ஒருபடி மேலே போய் விட்டார். அவ்வாறு அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன், அச்சமற்ற நிலையில் பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்….. அப்செட்டில் இருக்கும் இபிஎஸ்…. அ.தி.மு.க-வில் நடக்க போகும் அடுத்தடுத்த திருப்பங்கள்?…..!!!

மத்திய அரசில் ஆட்சிபொறுப்பில் உள்ள பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க, தலையில்லாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்தவுடன் தொடங்கிய குழப்பம், எப்போது முடியும் என்ற திசையே தெரியாமல் பயணிப்பது போன்று அக்கட்சியின் பிரச்சனை இருக்கிறது. இதற்கிடையில் டெல்லியை சமாளித்து அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமையாக வந்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மேலிடம் இதுவரையிலும் சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அதற்கு மாறாக ஓபிஎஸ் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இதுவே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக […]

Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்கள்: இனி 80 % வேலைவாய்ப்பு தமிழருக்கு?…. சீமான் வெளியிட்ட அறிக்கை….!!!!

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே கொடுக்க அரசு உடனே தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் வாயிலாக 800 இளம்பெண்களை ஜார்க்கண்டில் இருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் பணிக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ரோப் காா் திட்டம்: பழனி TO கொடைக்கானல்?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

பழனி TO கொடைக்கானல் மலைகளுக்கு இடையில் ரோப்காா் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கொடைக்கானலில் வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய- மாநில அரசுகள் திட்டமிட்டபடி அனைத்தும் மிகச்சரியான முறையில் நடந்து முடிந்தால், கொடைக்கானல் முதல் பழனி வரை போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்தில் இருந்து ரோப் காரில் வெறும் 40 நிமிடங்களில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும். பழனி -கொடைக்கானல் வரையிலும் சுமாா் 12 கி.மீ தொலைவுக்கு ரோப்காா் நிறுவுவது பற்றி மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

இந்த விவகாரத்தில் மாமியார் பேச்சை கேட்காதீங்க!…. அட்வைஸ் பண்ண அமைச்சர்….!!!!!

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 300-க்கும் அதிகமான பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் போன்றோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். இந்நிலையில் மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் பெயர்களை அழிய விடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பரசன் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மக்கள் மோடிக்கு தான் ஓட்டு போடுவாங்க”…. பா.ஜ.க தலைவர் அதிரடி ஸ்பீச்…..!!!!

ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்தக்கூடிய சர்வதேச தலைவர் பெல்லோஷிப் என்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் 30-ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சென்றார். இந்த மாதம் 8ஆம் தேதி பயிற்சியை முடித்த அவர் கலிபோர்னியா வாஷிங்டன் மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்த மாதம் 9ஆம் தேதி அண்ணாமலை பேசினார். அப்போது 8 வருடங்களில் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” …. Hospital முதல் வீடு வரை….. வைரலாக பரவும் பரிதாப புகைப்படம்….!!!!!

உயிரிழந்த மகனின் சடலத்தை விவசாயி தோலில் சுமந்து செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திகுவபுத்தூர் கிராமத்தில் விவசாயியான செஞ்சய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3-ஆம்  வகுப்பு படிக்கும் பசவையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா  தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பசவையாவை பாம்பு கடித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செஞ்சய்யா தனது மகனை  […]

Categories

Tech |