Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: சி-ட்ரங் புயலால் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்தியகிழக்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று “சி-ட்ரங்” என்ற புயலாக மாறி, இன்று வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. இதையடுத்து டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடக்கு வங்ககடல் பகுதிகளில் இன்றும், வடக்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கம், வங்கதேச கடலோர பகுதிகளில் நாளையும் மணிக்கு 100 […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் இயற்கைதான்…. எனக்கு எந்த சங்கேகமும் இல்ல!…. அடித்துக் கூறும் கார்த்தி சிதம்பரம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மரணத்தில் ஒரு சந்தேகமும் தனக்கு கிடையாது. முதல்வர் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி ஆவார். […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்!…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்…..!!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காருக்குரிய எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு கோவையில் நேற்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று உருவாகிறது புது புயல்?…. கொட்டித் தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,  நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள்…. வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்….!!!!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேடு, பிரதான சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!… ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து “தற்கொலை செய்த college student”…. போலீஸ் விசாரணை….!!!!

மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு  தனியார்  கல்லூரியில்  நிகில் என்ற  மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் திடீரென விடுதியில் வைத்து விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாளையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் இயக்கம் …. வெளியான அறிவிப்பு….!!!!

நாளையும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் , வியாபாரம், கல்வி, வேலை என தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஆண்டுதோறும் நடைபெறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால்  சென்னையில் வாகனங்கள் எதுவும் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தவிர  தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் மக்கள் தொகை கேட்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும் புதிய பணியிடங்களை நிரப்பவும் ஏற்கனவே உள்ள காலி இடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ,கடலூர். காஞ்சிபுரம். ஓசூர். தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லை என கூறினால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி எதிரொலி….. 1 கிலோ இவ்வளவு ரூபாயா?…. கவலையில் மல்லிகைப் பூ பிரியர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது. தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

வங்கக்கடலில் 12 மணிநேரத்தில் புயல் உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். அவ்வாறு புயலாக வலுப்பெற்று வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி டிங்கோனா தீவு-சந்திவிப் இடையில் கரையை கடக்கும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் பதற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு…. 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு….!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காருக்கான எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் இறந்தவர் குறித்த எந்த விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பொறுத்திருந்து பாருங்க!… 2026-ல் வாரிசு ஆட்சிதான்…. புதிய சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்…..!!!!

தமிழகத்தில் சென்ற 2021 ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றியடைந்தது. இதில் தி.மு.க மட்டும் 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசிற்கு பல வகையில் பாராட்டும், கடுமையான விமர்மசனும் என கலவையான மக்கள் கருத்து எழுந்து வருகிறது வருகிறது. இந்த நிலையில் மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக துறைமுகங்களில்…. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட-வட மேற்கில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென் கிழக்கே ஆயிரத்து 460 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அத்துடன் இது வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற அதிகவாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்…. மத்திய அரசு உத்தரவு….!!!!!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு  அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு  மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு  ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம்  செய்யப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இனி தட்டச்சுத் தேர்வுகளை இப்படித்தான் நடத்தணும்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகள், தாள் 1, தாள் 2 என இருநிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தாள் 1 தட்டச்சு செய்யும் வேகத்தை சோதனை செய்யும் தோ்வாகவும், தாள் 2 அறிக்கை கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும் நடத்தப்படும். இத்தோ்வு முறையில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்த வகையில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகளில் தாள் 1 அறிக்கை, கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும், தாள் 2 வேகத்தை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி போக்குவரத்துக்கு நெரிசலை அறிய…. புது “ஆப்” அறிமுகம்…..!!!!

சென்னையில் இப்போது நடைபெறும் மெட்ரோ இரயில் வழித்தடபணி, மழைநீா் வடிகால்வாய் ஆகிய குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு சாலைகள் குறுகலாகி இருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று அவ்வபோது சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், தற்காலிக போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி (அல்லது) இருவழிகளையும் போக்குவரத்து போலீஸாா் மூடுகின்றனா். இதற்கிடையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுப்பதற்கு, தனியாா் நிறுவனத்துடன் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு…. மின்சார ரயில் சேவை பாதிப்பு…. பயணிகள் அவதி….!!!!

சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு சொல்றீங்க! மறைந்த ஜெயலலிதாவின் திக் திக் நிமிடங்கள்…. வெளியான பரபரப்பு ஆடியோ….!!!!

சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அறிக்கையில் அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் சமீன்சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து இருந்தாலும், அது நடக்கவில்லை. இதையடுத்து அவருக்கு திறந்த இதய அறுவைசிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யாருன்னு அவங்களுக்கு தெரியும்?…. இபிஎஸ்-ஐ மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்….!!!!

சென்னையிலிருந்து விமானம் வாயிலாக நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது “தேவர் தங்க கவசம் விவகாரமானது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி சில பேர் நீதிமன்றத்துக்கு போக இருப்தாக தெரிகிறது. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்..? என மக்களுக்கு தெரியும். பாவத்தை அவர்கள் செய்து விட்டு பழியை என் மீது போடுகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

காவலர் நினைவு தினம்: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு 51 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி….!!!!

இன்று நாடுமுழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்ற 1959 வருடம் லடாக் பகுதியில் நடந்த சீனப்படை தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப்படை காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாகை ஆயுதப் படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், எஸ்பி ஜவகர் கடலோர காவல்படை லெப்டினல் கணபதி உள்ளிட்ட காவல்துறை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரலில் பொதுமக்கள் வசதிக்காக ஷாப்பிங்மால்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது “சென்ட்ரல் சதுக்கத்தில் ரூபாய்.400 கோடி செலவில் பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகளானது நடந்து வருகிறது. இவற்றில் 3 அடித்தளம், 1 தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகிறது. 600 கார்கள், 1,600 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தும் அடிப்படையில் பூமிக்கு கீழே பிரமாண்ட வாகனநிறுத்தம் வசதி அமைக்கப்பட இருக்கிறது. இப்போது இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் 7 […]

Categories
மாநில செய்திகள்

Single Use Plastic: ஏன் உற்பத்தியை நிறுத்தக்கூடாது?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை  உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Categories
மாநில செய்திகள்

இதுவரை சொல்லாத சொல்!…. இபிஎஸ்-ஐ சாடிய ஓபிஎஸ்…. பரபரப்பு பேச்சு….!!!!

மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தேவர் குருபூஜை-தங்ககவசம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுபடி நடந்துகொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அதாவது அவ்வாறு முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியலிருந்து விலக தயார் எனவும் நிரூபிக்காவிட்டால் […]

Categories
மாநில செய்திகள்

“கால்நடை மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் தொடங்கியது. இது மாணவர்களின் 12-ஆம்  வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் https:// adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பித்து வந்தனர். இதனையடுத்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ்  நகல்களை பதிவேற்றம் செய்யவும்   கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது…. அமலாக்கத்துறை எதிர்ப்பு….!!!!

அமைச்சர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி இப்படி செப்டிக் டேங்கை சுத்தம் செய்யாதீங்க…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும் போது  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவு நீர் பாதைகளை  இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை  நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு மரணம் […]

Categories
மாநில செய்திகள்

“அதை நினைச்சா இன்றும் உடல் நடுங்குது”…. பேரவையில் பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது  “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று கூடியது. இந்நிலையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் பள்ளிக்கல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் “கடந்த ஓராண்டுக்காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

இனி போதை நபருடன் வாகனத்தில் செல்பவர் மீதும்…. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

நம் நாட்டிலேயே அதிகமான சாலைவிபத்து மரணங்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1026 நபர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். அத்துடன் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதனை தடுக்க […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதனால் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-2023) மேல்நிலை 2ஆம் ஆண்டு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வு இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இவற்றில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

“கல்வித் தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை நான் மதிக்கவில்லை”…. தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்பு டுவிட்….!!!

தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபரான ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனம் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்து வருகிறார். மேலும் தன் நிறுவனத்தில் பலதரப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். கல்வி அடிப்படையில் மட்டுமின்றி திறமை மற்றும் முழுஈடுபாட்டின் அடிப்படையிலும் அவரது நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற்றவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தன் கல்வித்தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை தான் சேர்ப்பதில்லை என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்து இருக்கிறார். 5/ My own personal liberation came when I decided […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்!…. நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள் வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நேற்று திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் இந்த விளையாட்டை தடைசெய்ய கோரி தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, சென்ற செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நலனை கருதி இதுபற்றி கேட்ட சசி…. உடனே ஓகே சொன்ன ஜெயலலிதா…. அறிக்கையில் தகவல்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தமிழக நலனை கருதி தனது துறைகளை கவனிக்க திரு.ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க கழக மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் என்னிடம் கூறினார்கள். அதன்பின் நானும் அக்காவிடம் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு: அப்பல்லோ மருத்துவமனை ட்ரீட்மெண்ட் பற்றி…. சசிகலா சொல்வது என்ன?….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதாவின் இறப்பை என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. அக்கா உயிரோடு இருந்தவரை அவரை ஒரு குழந்தை போன்று, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பார்த்து வந்தேன். அக்காவின் […]

Categories
மாநில செய்திகள்

“அக்கா எப்படியும் பிழைத்து விடுவார்”… நம்பிக்கையோடு இருந்த சசிகலாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “AIIMS மருத்துவக்குழு மற்றும் டாக்டர்.ரிச்சர்ட் பீலே குழுவை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. எக்மோ கருவியை இணைத்துள்ளோம். இதனால் செயலிழந்த இதயம் செயல்படக்கூடும்” என என்னிடம் அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீரென பல்லை கடித்து சத்தமிட்ட ஜெயலலிதா…. பதறிப்போன சசிகலா…. பரபரப்பு தகவல்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, கடந்த 2016 நவம்பர் இறுதி வாரத்தில் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீன் சர்மா என்பவர் அக்கா ஜெயலலிதாவை வந்து பார்த்துவிட்டு, பின் அப்பல்லோ மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

திடீரென சசி தோளில் சாய்ந்த “ஜெ”…. மருத்துவரின் துரித செயல்…. பரபரப்பான தருணங்கள்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதையடுத்து அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு போயஸ் தோட்டத்திற்கு சுமார் 9 மணி […]

Categories
மாநில செய்திகள்

வாங்க அக்கா அங்கே போகலாம்!…. கோபமாக நோ சொன்ன ஜெயலலிதா…. கவலை தெரிவித்த சசிகலா….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் நான் மிகவும் கவலையில் இருந்தேன். ஏனெனில் அக்கா ஒருபோதும் அந்த அளவுக்கு சோர்வடைந்தது […]

Categories
மாநில செய்திகள்

வேண்டாம் அக்கா…! ரத்து செய்ய சொன்ன சசிகலா… பிடிவாதம் காட்டிய ஜெயலலிதா….!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, கடந்த 21/09/2016 அன்று காலையில் இருந்து அக்கா ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் அதிகரித்தது. இதனால் நான் அக்காவிடம் இன்றைய அலுவல் பணிகளை ரத்து செய்து விடுங்கள் என்று சொன்னேன். ஆனால் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் மறைந்த அடுத்த நாளிலிருந்தே!…. மூத்த சகோதரியான ஜெயலலிதா…. சசிகலா உருக்கம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, “கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே ஜெயலலிதா அவர்களுக்கு நான் ஒரு நல்ல தோழியாக இருந்தேன். புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த அடுத்த நாளிலிருந்து நான் ஜெயலலிதா அவர்களுடன் போயஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை: ஆவணங்கள், புகார்கள், மனுக்கள் எதையும் அவங்க கரெக்டா கொடுக்கல…. -வி.கே.சசிகலா….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது, 15/01/2018 மற்றும் 12/01/2018 தேதிகளில் என் சார்பாக ஆணையத்தில் தன் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மனு மற்றும் மெமோவில், இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாயிலாக தாக்கல், […]

Categories
மாநில செய்திகள்

வைரலாகும் வீடியோ…. என் அம்மா சாக்லேட்டை திருடிட்டாங்க”….. காவல் நிலையத்தில் புகார் அளித்த 3 வயது சிறுவன்….!!!!

மூன்று வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்கும் வீடியோ வைரலாக பரவி  வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் மாவட்டத்தில்  தனது பெற்றோருடன் வசித்து வரும் 3  வயது சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்து  ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து சிறுவன் கூறும் புகாரை அதிகாரி  ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாய் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!!…. வாட்ஸ் அப்பில் வந்த சூப்பர் அப்டேட்…. இனி நீங்களே எல்லாம் செய்து கொள்ளலாம்….!!!!

தனது பயனாளர்களுக்கு whatsapp நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Whatsapp நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்களை இறக்கி கொண்டே வருகிறது. ஏனென்றால் மார்க்கெட்டில் நிறுவனத்திற்கு போட்டி அதிகமாக இருப்பதால் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புதிய அம்சத்தை கொண்டுவரும் whatsapp இப்போது அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வர இருக்கிறது. இதற்கான டிரெயிலை  ஏற்கனவே whatsapp தொடங்கிவிட்டது. இதுகுறித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா விவகாரம்…. வியப்பில் ஆழ்த்திய சுகாதாரத்துறை செயலாளரின் பதில்…. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   அம்மாவின்  இறப்பு  தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்   8  பேர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 8  பேர் மீது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி நீங்கள் மற்றவர்களின் whatsapp ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்…. வெளியான முக்கிய டிரிக்….!!!!

வாட்ஸ் அப்பில் ஒரு வித்தியாசமான டிரிக்  உள்ளது. மக்கள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல செயலிகள் இருப்பது போலவே whatsapp செயலிலும் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் அடுத்த நாள் அதே நேரம் வரும் பொழுது மறைந்து விடும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அவர்களின்  whatsapp   பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தனிப்பட்ட விழாக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு பதிலாக தங்களது […]

Categories

Tech |