தமிழ்நாடு அரசு மாநில எல்லைகளை மூடினால் போதாது ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை (முடக்கத்தை) அறிவிக்க வேண்டும். மாநில எல்லைகளை மூடினால் போதாது, ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும். ஊரடங்கைத் தவிர்க்க முடியாது. நாளை செய்ய இருப்பதை இன்றே செய்யலாமே? தமிழ்நாட்டு […]
