தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உதவி மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,31,701 பேர் எழுதி இருந்தனர். இந்த தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வை எழுதினார். இந்த தேர்வில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். […]
