Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துங்க… மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

ஆராய்ச்சியினையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கப்படுத்த மத்திய. மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியானது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும்,ஆராய்ச்சிகளையும் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது .ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தினால்  நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணமுடியும். தற்போது நாம் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கு 90% சீனாவை நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு நாட்டையே நம்பி இருப்பதால்  தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருவதாக நீதிபதி வேதனை அடைந்துள்ளார். மேலும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி மு. க. ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை பல மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கக்கோரி இரு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க நிதியில்லை மத்திய அரசு கைவிரிப்பு..!!

நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன…? – வெளியாகிய தகவல் …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார். என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் ? நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அமலுக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்தே தமிழகத்திலும் பொதுமுடக்க தளர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இன்று முதல்வர் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சித்த மருத்துவர் தயாரித்த “IMPRO மருந்துப்பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது”… தமிழக அரசு!!

மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது. 66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

எந்த பரிசோதனை அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குகிறீர்கள்?: அரசுக்கு கோர்ட் கேள்வி!!

கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம்: சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர், தமிழக முதல்வர் இரங்கல்!!

ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வழிபட்டு தலங்கள் திறப்பு பற்றி மே 15ல் முடிவு – அரசு தகவல் …!!

தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆர்.கே ஜலீல்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில், மக்கள் மனதில் குழப்பம் வரும்போதும்,  மன ஓட்டத்திற்கு நினைவு நிறைவான நிம்மதிக்காக தான் கோயில், மசூதி சர்ச் போன்ற மாதவழிபட்டு தலங்களுக்கு செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பல்வேறு மத வழிபாட்டு தளங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசின் நிதிநிலைமை கருத்தில் கொண்டு சில கடைகளை திறக்க அனுமதித்திக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர் ஆய்வகங்கள் உள்ளன?: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!

கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த தொடர்பாக மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, கொரோனா வைரசை கண்டறிந்து, அந்த வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டியது முக்கியம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – உள்துறை அமைச்சகம் கடிதம்!

சுகாதாரத் துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – மாநில அரசு உத்தரவு!

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் பொருட்களை பதுக்குவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஏப்., 14ம் தேதி வரை நாடு முழுவதும் 144 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடை …. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் – மத்திய அரசு அறிவுறுத்தல் ..!!

அத்தியாவசிய பொருட்களில் தேவை பிரச்சைகளுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 144 , ஊரடங்கு உத்தரவு வெளியானதை அடுத்து மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காதோ […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அதுக்கேற்றார் போல சிறப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. வென்டிலேட்டர்கள், மாஸ்க், மருந்துப் பொருட்கள் போன்றவை தேவையான அளவு இருக்க வேண்டும், மேலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கை கடுமையாக்குங்க….. இல்லனா நடவடிக்கை எடுங்க…. மத்திய அரசு உத்தரவு ….!!

ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இன்று காலை பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உதவ குழு அமைத்தது உள்துறை அமைச்சகம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 137பேர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – மத்திய, மாநில அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று […]

Categories

Tech |