மத்திய பிரதேச மாநில அமைச்சர் துளசிராம் சிலாவத்தும் அவரின் மனைவியும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத்தும், அவரின் மனைவியும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நானும் எனது மனைவியும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]
