உத்திரபிரதேச மாநிலம் பண்டாவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் உள்ள மார்க்ககாட்டிலிருந்து பதேபூர் என்ற மாவட்டத்தின் ஜரோகி என்ற பகுதிக்கு படகில் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த படகில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகவும், அதில் 20 முதல் 25 பேர் பெண்கள் என்றும், மீதம் இருப்பவர்கள் ஆண்கள் என்றும் கூறப்பட்டது. ரக்ஷா பந்தன் விழாவான இன்று ராக்கி கட்டுவதற்காக […]
