அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு சலுகைகள் கிடைக்கக்கூடாது என்பதில் மத்திய பாரதிய ஜனதா அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு முத்தரசன் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக சாட்டினார்.
