புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 […]
