கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]
