மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிக மின் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இவற்றைத் தடுக்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் என்று திமுக அரசு தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த அவர்களை வஞ்சிக்கும் வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் […]
