அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாணிக்கம் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான மாணிக்கம் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் அதிமுகவின் முக்கிய நிர்வாகி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தாவி இருப்பது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
