சேலம், ஆத்தூர் அருகே அரசு பள்ளி மாணவியரின் வருகைப்பதிவேட்டில் ஜாதி பிரிவு இடம் பெற்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 2500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வருகை பதிவேட்டில் மாணவியர்களின் பெயர்களுக்கு அருகே அவர்களின் ஜாதியும், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு பேனாக்களை கொண்டு வேறுபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]
