கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியவற்றின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா […]
