சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொசுவலைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் அடைந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்ட பிறகுதான் உடற்கூறாய்வு நடந்தது. மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தலை மறைவாக இருப்பதால் அவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி […]
