பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு போக்சோ நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நாகராஜ் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் […]
