வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் அருகே இருக்கும் அம்மாபாளையத்தில் வசித்துவரும் மணிகண்டன் என்பவரின் மகள் நிதர்சனா. நிதர்சனா காட்டூரில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிதர்சனா இறைவணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை. பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்த ஆசிரியர்கள் விரைந்து மாணவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு முதலுதவி […]
