சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் நாயக். இவருக்கு லட்சுமிபாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா(16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூருவிலுள்ள பசவனஹள்ளி அரசு பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சென்ற 18-ஆம் தேதி ரக்ஷிதா கல்லூரிக்கு போக அங்குவந்த பேருந்தில் ஏற முயன்றார். எனினும் அதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கிவிட்டார். இதன் காரணமாக கால் தவறி பேருந்திலிருந்து தவறிவிழுந்த அவருக்கு, தலையில் […]
