உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் புலந்தர்சாஹர் மாவட்டம் அப்பர் கோட் என்னும் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் உள்ள கழிவறையை 2 மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ நேற்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி […]
