மாணவிக்கு ஆபாச மெசேஜ் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பறக்கை மேலபுல்லுவிளை பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாசமான மெசேஜ் அனுப்பியுள்ளார். […]
