கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்டகிரி விரிவு பகுதியில் தனுஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் தனது நண்பர்கள் 16 பேருடன் கண்ணகி சிலைக்கு பின்புறம் இருக்கும் மெரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை தனுஷையும், அவரது நண்பரான ஆகாஷ் என்பவரையும் கடலுக்குள் […]
