தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக தலைமை ஆசிரியர் தலைமையில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாகப் பணியாளர் உள்ளிடோர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ பிரித்துப் பார்த்து பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றது. […]
