சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா […]
