மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சென்ற 17ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதியம் வரை காத்திருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு […]
