கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா-கலைச்செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின். இவர் திருநகரில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் உலக சாதனையாளராக வேண்டும் என்பதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக் கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். இவர் டிஷு பேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஓவியம் வரைகின்றார். தன் முன் எந்த […]
