சிவகங்கை மாவட்டத்திலுள்ள வி.மலம்பட்டி பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வள்ளியப்பன்(20), சின்னையா(17), விஜயகுமார்(15) ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வழக்கம் போல காலை 7 மணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். இதனையடுத்து காலை உணவு இடைவேளையின் போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார். […]
