பொள்ளாச்சியில் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுக்க மாணவர்களுக்கு சிறப்பான திட்டம் தொடங்கப்பட்டன. மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறை “போசோ” என்கிற பயிற்சியில் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. […]
