பள்ளியில் இருக்கும் பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியில் 50 ஆண்டிற்கு மேல் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. மேலும் மாணவர்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதும் வழக்கமாகும். இந்நிலையில் பள்ளியில் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்காக ஆலமரத்தை […]
