அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஆண்டகலூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு சமைத்து வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், உப்பு, காரம் இல்லாமல் இருப்பதாக மாணவர்கள் அடிக்கடி புகார் அளித்து வந்தனர். […]
