பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல் நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவ செல்வங்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பலமுறை காலை உணவு சாப்பிடாமல் சென்று உள்ளேன். காலையில் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நாம் காலையில் குறைவாக தான் சாப்பிடுகிறோம் என்று கூறினார். […]
