பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொது அறையில் உள்ள ராணியுடைய புகைப்படத்தை நீக்குவதற்கு அதிகப்படியான மாணவர்கள் வாக்களித்துள்ளார்கள். மாக்டலென் கல்லூரி பொது அறையினுடைய மாணவர்கள் அமைப்பு, காலனித்துவத்தின் சின்னமாக, பிரிட்டன் ராணி இருப்பதால் அவரின் புகைப்படத்தை பல்கலைகழகத்தின் பொது அறையிலிருந்து நீக்கிவிட்டு, கலைப்படைப்பு ஒன்றை வைக்குமாறு கோரியுள்ளார்கள். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முக்கிய தலைவர்களின் படத்தை வைக்க பரிந்துரைத்துள்ளார்கள். இது தொடர்பில் பிரிட்டனின் கல்வித்துறை செயலாளர் Gavin Williamson கூறுகையில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ராணியின் படத்தை […]
