மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த வருடம் 14,84,052 விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அதைவிட கூடுதலாக வழங்க ஆலோசனை நடந்தது. முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் படி 4900 கோடி வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு மருந்து கடைகளில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் […]
