தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. அதேசமயம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு புகாரளிக்கலாம். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய […]
