ரயில் தண்டவாளத்தை கடக்கச் முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி யமுனை நகரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாய் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் சாய் கிருஷ்ணன் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அப்போது ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடந்து […]
