பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல். தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. […]
