கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டு 95% மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை தமிழக அளவில் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இதில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 முதல் 900 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளை தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா, […]
