கொரோனாவை மாட்டு கோமியம் போக்கும் என்று வழங்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் 140 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]
