சாலையில் நடமாடிக் கொண்டிருந்த மாடு முட்டி 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலைகளில் மாடுகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்த மாடுகளை பிடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்த மாடுகளை பிடித்து பராமரிப்பு நிலையங்களில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பாரதி நகர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த மாடு திடீரென அங்கு நின்ற நபர்களை துரத்தியுள்ளது. இதில் 3 […]
