வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மாடு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பகுதியில் பொன்னுத்துரை என்பவர் தனது வயல்வெளிக்கு அருகிலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். இவர் விவசாயம் தொழிலை பார்த்து வருகிறார். அந்த வயலில் பொன்னுத்துரை செல்லமாக ஒரு மாட்டை வளர்த்து வந்தார். இதனை அடுத்து அந்த பசு மாட்டிற்கு கட்டியிருந்த கயிறு அறுந்து இருந்த நிலையில், அருகாமையில் இருக்கும் வெங்கடேசன் என்பவரது நெல்வயல் தோட்டத்திற்கு […]
