சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இலுப்பக்குடி சாலையில் உள்ள சமுதாய கூடத்தில் மாடிப்பகுதியில் இவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நள்ளிரவில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் சேவுகன் […]
