குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுமை கிணறு பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான செல்வமணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரோசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களாக செல்வமணியும் ரோசியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரோசி திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் […]
