மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளி வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது திடீரென செந்தில் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செந்திலை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
