சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ப்ரண்ட்ஸ் , பாஸ் என்கிற பாஸ்கரன் ,மீசைய முறுக்கு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் விஜயலட்சுமி. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த விஜயலட்சுமி தற்போது அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
