சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21-வார்டுகளுக்கும் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவே லோயர்கேம்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக 21-வது வார்டு லோயர் கேம்ப் பகுதியில் மிகவும் கலங்கலான, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த […]
