மூன்று வருடங்களுக்குப் பின் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள புரதான சின்னங்களான அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம் சிறப்பு பெற்றதாக விளங்குகின்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடற்காற்று, உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகன புகை, பறவைகள் எச்சம் போன்ற காரணங்களால் மாசு படிந்து காணப்படுகின்றது. சிற்பக் கலைகளில் உள்ள மாசுகளை படிமங்களை தொல்லியல் துறை 2 வருடத்திற்கு ஒருமுறை ரசாயனம் பூசி […]
