கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி என்ற கிராமத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதலில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் கொரோனா […]
