தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த […]
