Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த மண் சுவர்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன மழையினால் மண் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் தாய் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் நேதாஜி வீதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினர்  மகன் ராமசாமிக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் வளையக்கார வீதியில் வசித்து வருகின்றார். இதில் ராஜம்மாள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராமசாமி தனது தாய் […]

Categories
உலக செய்திகள்

ஓமனில் கரையை கடந்த சகீன் புயல்…. 3 பேருக்கு நடந்த விபரீதம்…. அதிகாரியின் தகவல்…!!

கனமழையின் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் “சகீன்” புயல் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஓமன் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியது. அதன்படி பொதுமக்கள் வீட்டில் இருந்த நிலையில் சகீன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

தொடர்ந்து பெய்த மழையினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக கனமழை வெளுத்து வாங்கியதால் மாநகரின் பள்ளமான பகுதிகளில் மழைநீரானது தேங்கி காணப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பின் கருங்கல்பாளையம் பகுதியில் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனைதொடர்ந்து பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. முறிந்து நாசமான வாழைகள்…. கவலையில் விவசாயிகள்….!!

காற்றுடன் கூடிய பலத்த மழையில் வாழைகள் முறிந்து நாசமானதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகிலுள்ள சொலவனூர், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த காற்றால் சொலவனூரில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 1,000 வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இதேபோன்று பனையம்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடைய தோட்டத்திலும் சாகுபடி செய்யப்பட்ட 400 வாழைகள் முறிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துட்டு…. பெண்கள் நாற்று நட்டு போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

சாக்கடை கழிவு நீரை அகற்ற கோரி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் செல்வதற்காக வடிகால் வசதி கட்டப்பட்டுள்ளது .ஆனால் சாக்கடை கழிவு நீர் வெளியே செல்லமால் அப்படியே தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக அந்தியூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் வெளியே செல்வதால் சாலையில் தேங்கி குட்டை போல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் தஞ்சை தெற்குவீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழராஜ வீதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து அய்யங்கடை தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் தெரு வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோன்று பிற சாலைகளிலும் வெள்ளம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. அதிகாரியின் ஆய்வு….!!

மழையினால் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் 500 ஆண்டுகள் பழமையான செல்லீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் உள்ள சுற்றுச்சுவரானது கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையினால் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் இரவில் நடைபெற்றதால் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து கோவில் செயல் அதிகாரி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்த சுற்றுச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது . அந்தமானை ஒட்டியுள்ள வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வு  மண்டலம் வலுப்பெற்று தற்போது புயல் சின்னமாக உருவாகி உள்ளது. இந்த புயல் குலாப் புயல் என்று அழைக்கப்படுகிறது.  இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் புயல்கள் ஏற்படுவது மிகவும் அரிதானது. இந்த குலாப் புயல் விசாகப்பட்டினம்- கோபாலபூருக்கு இடையே இன்று மாலை கரையை  கடக்கவுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

பலத்த மழை காரணமாக பேருந்து நிலையத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, ஆத்தூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் நீர் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அண்ணா பூங்கா, சத்திரம், செவ்வாய்ப்பேட்டை, பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. அடியோடு சரிந்த வாழை மரங்கள்…. கவலையில் விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கன மழையால் வாழை மரங்கள் சரிந்து விவசாயிகள் கவலையில் இருக்கின்றர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டிக்கொட்டை தாள பாளையம், கூனாக்க  பாளையம் போன்ற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பல வகையான வாழைமரங்களை சாகுபடி செய்தனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையினால் 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சரிந்து நாசமானது. இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் கனமழையால் சரிந்து விழுந்தது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் வடக்குத் தெருவில் இசக்கிமுத்து என்ற வேம்பு வசித்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் இசக்கிமுத்து வர்த்தக ரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் சங்கரசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்தது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில்… “அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை”… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்க போகுது மழை…. சென்னை வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும். இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 46 வருஷத்துல… இப்படி ஒரு மழையை பார்த்ததே இல்லை… தத்தளிக்கும் டெல்லி… வானிலை தகவல்…!!!

டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ராஜஸ்தான் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த மழை டெல்லி-என் சி ஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெய்யும் என கூறியுள்ளது. கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 5 நாட்களுக்கு…. மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திறக்கவில்லை…. தேங்கி கிடக்கும் நெல்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயியினர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் முற்றுகையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த வருடம் 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியானது தஞ்சை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியிருக்கிறது.  இதனையடுத்து கோவிலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காசாநாடு புதூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த தடுப்புசுவர்…. நடைபெறும் தீவிர பணி… அதிகாரியின் ஆய்வு….!!

மலைப் பாதையில் நடைபெறும் மண்சரிவு சீரமைப்பு பணியினை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் சுமார் 3 மணி நேரம் நீடித்த மழையினால் குப்பனூர் செல்லும் சாலையில் காக்கம்பட்டி கிராமம் அருகில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்வதற்கு நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு…. இடி மின்னலுடன் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பதினோராம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் கனமழை…. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகம், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகின்றது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 670 கனஅடி தண்ணீர் வந்தது. இதனையடுத்து நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடி அதிகமாக காணப்பட்டது. அதன்பின் அணையிலிருந்து பாசன வசதிக்காக வினாடிக்கு 5 ஆயிரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழைநீர்…. கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்…. அதிகாரியின் ஆய்வு….!!

புதிய கால்வாய் அமைத்து வரும் பணியை அதிகாரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் குமரகிரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் பச்சப்பட்டி, வெள்ளகுட்டை கால்வாய் வழியாக வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்பட்டது. இதனை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பச்சப்பட்டி பகுதியில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த தடுப்பு சுவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அதிகாரிகளின் அறிவுரை….!!

கனமழையினால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப் பாதையில் காக்காம்பாடி கிராமம் அருகே சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால்  சுமார் 1 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பக்கமாக சாலையை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையினால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி ஏற்காட்டில் பெய்த மழையினால் மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுந்தது. மேலும் ஏரி மற்றும் அணைகள் நிரம்பிய வழிந்ததால் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சேலம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், பெரமனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, குகை, 5 […]

Categories
மாநில செய்திகள்

இன்னைக்கு சடசடவென மழை அடிச்சு ஊத்த போகுது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. அவதிப்பட்ட மக்கள்….!!

கொட்டி தீர்த்த கனமழையினால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குமலன் குட்டை, காளைமாடு சிலை- சென்னிமலை சாலை, ரயில்வே நுழைவு பாலம், கொல்லம்பாளையம் ரவுண்டானா உட்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கழிவுநீர் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர். அதன்பின் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் சாக்கடைகளில் சேர்ந்து அடைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்கை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காற்றுடன் கனமழை நீடித்ததால் கடைவீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோன்று கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி பழையனூர்,சித்தனங்குடி, திருராமேஸ்வரம், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

புதுஏரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கன மழையினால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கிச்சிப்பாளையம், நாராயண நகர், பச்சப்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் டி.பெருமாள் பாளையம் பகுதியில் கல்லாறு, திருமணிமுத்தாறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக டி.பெருமாள்பாளையம் ஊராட்சியில் உள்ள காரைக்காடு ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்…. அதிகாரிகளின் தகவல்….!!

அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் வினாடிக்கு 4,600 கன அடி நீர் வெளியில் விடப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு” ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. தீவிர கண்காணிப்பு பணி….!!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்நிலை பகுதியில் மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இதனையடுத்து காவிரி நீர்நிலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்பின் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த 2 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணை” 4,790 கன அடி தண்ணீர் திறப்பு…. அதிகரிக்கும் நீர்வரத்து….!!

பெய்துவரும் கனமழையினால் பவானிசாகர் அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்ட பவானிசாகர்  அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்பட்டு, நீர்பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.பிசி ஆகும். இதனையடுத்து நீலகிரி மலைப்பகுதியிலிருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்கிவருகிறது. இந்த பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” தேங்கி கிடந்த நீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

ஈரோட்டில் பல இடங்களில் பெய்த மழையினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்ததால் ராஜாஜிபுரம், பெரியவலசு, கருங்கல்பாளையம், ஆர்.கே.வி.ரோடு போன்ற பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து பாதாளச் சாக்கடை, மின்சார கேபிள் பதிக்கும் பணி, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 10 மாவட்டங்களில்… வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” ஈரப்பதத்துடன் காணப்பட்ட நிலங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தர்மபுரியில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் தர்மபுரி மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் விவசாய சாகுபடிக்கு உறவு நடந்த நிலங்களில் மழையினால்  ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்…. கவலையில் தொழிலாளர்கள்….!!

கன மழை பெய்து உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் போன்ற பகுதிகளில் வருடந்தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் உப்பளங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக அதிராம்பபட்டினம் பகுதியில் கெமிக்கல் உப்பு, உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” தேங்கி கிடந்த நீர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை சுமார் 1 மணிநேரம் வரை நீடித்தது. இதேபோன்று சிவகிரி, ஊஞ்சலூர், அந்தியூர், போன்ற பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” தேங்கி கிடந்த நீர்…. சிரமப்பட்ட மாணவ-மாணவிகள்….!!

கனமழை பெய்ததால் வகுப்பு முடிந்து வரும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையானது மாலை நேரமும் பெய்ததால் பள்ளி, கல்லூரிகளில்இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் சிலர் மழையில் நனைந்தபடியும், குடையை பிடித்தபடியும் சென்றனர். இதனையடுத்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் மாணவ- மாணவிகளை  பெற்றோர் அழைத்து சென்றனர். இந்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவதி அடைந்துள்ளனர். இவ்வாறு பெய்த தொடர் மழையால் சாலைகளில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. உயிர் தப்பிய முதியவர்…. ஆய்வு செய்த அதிகாரி….!!

மலைப்பகுதிகளில் கனமழையின் போது ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசெங்குளம் கிராமத்தில் ஒரு ஓட்டு வீட்டில் சொக்கப்பன் என்பவர் வசித்து வருகின்றார். அந்தப் பகுதியில் கனமழை பெய்த போது ஓடுகள் நனைந்து உடைந்து விழ தொடங்கியதால் உடனடியாக அருகில் வசித்து வரும் சொக்கப்பனின் மகன் சிவா ஓடிவந்து தந்தையை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனையடுத்து அவர் சென்ற சில நிமிடத்தில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அங்கு போக கூடாது…. தண்டோரா மூலம் எச்சரிக்கை…. வருவாய் துறையினரின் பங்களிப்பு….!!

வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதால் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு உபரிநீர் திறக்கப்பட்டு அந்த ஆற்றின் கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கோபி வட்டம், வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட பெரியகொடிவேரி, கள்ளிப்பட்டி, அடசப்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி ஆகிய பவானி ஆற்று கரையோர பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் மாதத்தில்…. தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்…. வானிலை மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 1 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு… 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் 30ஆம் தேதிவரை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது. சில மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்து வருகின்றது. ஜூன் மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து படியே இருந்தது. கேரளா முழுவதும் இன்று முதல் 30ம் தேதி வரை நான்கு நாட்கள் மிக பலத்த மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை..!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

கிரீன்லாந்து பனிமலையில் முதன் முறையாக மழை…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!

கிரீன்லாந்திலுள்ள  பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர்  முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், மழைப்பொழிவை பதிவு செய்ய ஆரம்பித்த பிறகு முதல் முறையாக கிரீன்லாந்து பனிமலையின் உச்சியில் ‘ summit camp’ ல் மழை பெய்துள்ளது. மழைமானிகள் நிறுவப்படாத பகுதிகளில் திடீர் என்று மழை பெய்ததால் மழையின் அளவை பதிவு செய்ய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 10,551 அடியில் மழைப்பொழிவு என்பது பருவநிலை மாற்றத்தின் அறிகுறி என்று […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை..!!

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் சிவகங்கை, மதுரை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று முதல் 24ஆம் தேதி வரை 3 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.. தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் நாளை முதல் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது மேலும் 21ல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆக.,19 வரை….. 5 நாட்கள் – திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் வங்க கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்து 2 நாட்களுக்கு… இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. ஆக்ரோஷமாக எழும்பிய ராட்சத அலை…. ஏமாற்றத்துடன் சென்ற பயணிகள்….!!

சாரல் மழையினால் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசியது. இதனால் கட்டுமரம் மற்றும் பள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோவளம், சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மணக்குடி உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீன் தொழில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. தேங்கி காணப்பட்ட மழைநீர்…. பொதுப்பணித் துறையினரின் கண்காணிப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து மயிலாடியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், தக்கலை, குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, இரணியல், களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பரவலாக பெய்த மழை…. யாரும் பறிக்க முடியாது…. முகாமிட்டு இருக்கும் பறவைகள்….!!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை ஆரஞ்சு மற்றும் மாதுளை பழங்கள் பழுத்து தொங்குகின்றது. விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வண்ண காளான்கள் மற்றும் அழகிய வண்ண பூக்கள் பூத்து இருக்கின்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் அழகாக மலை ஆரஞ்சு பழங்களும், மாதுளை பழங்களும் அதிக அளவு பழுத்து தொங்குகின்றது. இந்தப் பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் பெரும்பாலான பறவைகள் […]

Categories

Tech |