தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதிப்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர் என கூறப்படுகின்றது.
